Subscribe:

வெள்ளி, 18 நவம்பர், 2011

மாணவர்களுக்கான போட்டிகள்


புதுக்கோட்டை, செப். 19:  புதுக்கோட்டை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி, சனிக்கிழமை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த அமைப்பு சார்பில் இளைஞர்களிடையே காந்திய சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியம், மாறுவேஷம் உள்ளிட்ட போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு போட்டிகள் அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன. காந்தி பேரவை நிறுவனர் வைர.ந. தினகரன் போட்டிகளைத் தொடக்கிவைத்தார்.
பேச்சுப் போட்டிக்கு கவிஞர் வீ.கே. கஸ்தூரிநாதன், புலவர் நாகூர், பேராசிரியர் மு.பா ஆகியோரும், கவிதைப் போட்டிக்கு ஆசிரியர்கள் முத்துசாமி, அனுராதா சீனிவாசன், சரவணன் ஆகியோரும், கட்டுரைப் போட்டிக்கு விஜயலட்சுமி, நாராயணன் ஆகியோரும், பாட்டுப் போட்டிக்கு செüம்யா, லலிதா ஆகியோரும், ஓவியப் போட்டிக்கு அய்யப்பா, ராஜப்பா ஆகியோரும் நடுவர்களாகப் பணியாற்றினர்.


போட்டிகளில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.
திருவருள் பேரவைத் தலைவர் ஆர். சம்பத்குமார், பள்ளித் தலைமையாசிரியர் ஆர். போஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.


போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அக். 2-ம் தேதி டவுன் ஹாலில் நடைபெறவுள்ள காந்தி ஜெயந்தி விழாவில் பரிசுகள் அளிக்கப்படும்.


போட்டிக்கான ஏற்பாடுகளை காந்தி பேரவை நிர்வாகிகள் சேகர், காவலன், வேம்பரசன், கருணாகரன், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக