Subscribe:

வெள்ளி, 18 நவம்பர், 2011

செக்கிழுத்த சிதம்பரனார்



தாய்நாடு காக்க வேண்டி
தனதுபொருள் இழந்தவர் யாரு?
பாய்மரக் கப்பல் ஓட்டி
பண்பாளர் சிதம்பரம் அவர் பேரு!

வழக்கறிஞர் தொழிலை விட்டு
வருத்தமின்றி சிறைசென்ற தாரு?
முழக்கமிட்டு நாட்டுக்காக
முனைந்திட்ட சிதம்பரம் அவர் பேரு!

செல்வங்களை இழந்து அன்று
செக்கடியில் துன்பப்பட்ட தாரு?
நல்வழியில் நடந்து சென்று
நாட்டுக்குழைத்த சிதம்பரம் அவர் பேரு!

அல்லல்பட்டும் அவதிபட்டும்
அறவழியில் நடந்தவர் யாரு?
நல்ல மனம் நலிந்தபோதும்
நடைபோட்ட சிதம்பரம் அவர் பேரு!

திலகர்வழி தினமும் சென்று
திருக்குறளாய் வாழ்ந்ததிங்கு யாரு
கலகம் செய்து வெள்ளையரைக்
கதறவைத்த சிதம்பரம் அவர் பேரு!
வீ.கே. கஸ்தூரிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக